மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர், தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கிருஷ்ணராஜ்(வயது 22). இவர் நேற்று காலையில் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருஷ்ணராஜின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கிருஷ்ணராஜின் சித்தப்பா திருநாவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எங்களது குடும்பத்துக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியரான வெங்கடேசனின் குடும்பத்துக்கும் இடப்பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று(அதாவது நேற்று முன்தினம்) தனது வீட்டிற்கு வந்த வெங்கடேசன், என்னையும், எனது அண்ணன் மகன் கிருஷ்ணராஜையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரது சாவுக்கு காரணமான வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கிருஷ்ணராஜை தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கடேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு