மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் அருகே, மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி சாவு

விளாத்திகுளம் அருகே மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 40) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கருப்பசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதற்காக அவர் மதுபாட்டிலை வாங்கி தனது வீட்டில் மறைத்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு தெளிப்பதற்காக, பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலையும் வாங்கி தனது வீட்டில் மறைவான இடத்தில் வைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் காலையில் கருப்பசாமி மது குடிக்க நினைத்தார். அப்போது அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து குடிக்க சென்றார். அப்போது அவர் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

உடனே கருப்பசாமியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் அருகே மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு