மாவட்ட செய்திகள்

வண்டலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

வண்டலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் சாய் டார்த்திகா என்கிற சாய்தனா (வயது 16). இவர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். வீட்டு வேலை சரியான முறையில் செய்யாததால் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி சாய்தனா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை