மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் அருகே: குளத்தில் மூழ்கி மாணவன் பலி - புயலில் சாய்ந்த மரக்கிளைகளுக்கிடையே சிக்கினார்

வேதாரண்யம் அருகே கோவில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது புயலில் சாய்ந்த மரக்கிளைகளுக்கிடையே சிக்கி மாணவன் இறந்தான்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பெரியகுத்தகை கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் அகிலன்(வயது15). இவர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அகிலன் தனது நண்பர்களுடன் அருகே உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் குளிக்க சென்றார். இந்த குளத்தில் கஜா புயலில் சிக்கி ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த அகிலன் எதிர்பாராதவிதமாக குளத்தில் சாய்ந்திருந்த மரக்கிளைகளுக்கிடையே சிக்கினார்.

இதனால் குளத்தில் மூழ்கிய அகிலன் பரிதாபமாக இறந்தார். அப்போது அவரை காணாமல் திடுக்கிட்ட அவரது நண்பர்கள் இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறினர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தீவிர தேடுதலுக்கு பின்னர் அகிலனை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அகிலன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பெரியகுத்தகை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்