மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60), விவசாயி. இவருடைய மனைவி சுகுணா (56). இவர் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்து, தனது வீட்டின் பின்பக்க கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.

அப்போது தனது பின்னால் யாரோ வருவதை உணர்ந்த சுகுணா, யார் என்று கேட்டபடி மின் விளக்கை போட்டார். அந்த சமயத்தில் மர்மநபர் ஒருவர், திடீரென சுகுணாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார்.

இதில் பதறிய அவர் உடனே திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அவரது கணவர் ராமமூர்த்தி மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்