மாவட்ட செய்திகள்

விளாம்பட்டி அருகே, தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

விளாம்பட்டி அருகே தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி அருகே உள்ள நாடார்பட்டியை சேர்ந்தவர் வீரணன் (வயது 25). தையல் தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பவித்ரா(22) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 வயதில் பவிக்ஷா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

பவித்ரா வயிற்றுவலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் வயிற்றுவலி அதிகமானதால் நேற்றுமுன்தினம் பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதனிடையே மனைவியின் உடலை உறவினர்கள் துணையுடன் அடக்கம் செய்து விட்டு வீரணன் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தையை தவிக்க விட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு