மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் அருகே, காட்டிலிருந்து தண்ணீர் தேடி கண்மாய்க்கு வந்த புள்ளிமானை நாய்கள் சூழ்ந்து கடித்ததில் படுகாயம் அடைந்தது

விளாத்திகுளம் அருகே, காட்டிலிருந்து தண்ணீர் தேடி கண்மாய்க்கு வந்த புள்ளிமானை நாய்கள் சூழ்ந்து கடித்ததில் படுகாயம் அடைந்தது

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே, காட்டிலிருந்து தண்ணீர் தேடி கண்மாய்க்கு வந்த புள்ளிமானை நாய்கள் சூழ்ந்து கடித்ததில் படுகாயம் அடைந்தது.

புள்ளிமான்

விளாத்திகுளம் பகுதி காடுகளில் புள்ளி மான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. சில நேரங்களில் புள்ளி மான்கள் இரை மற்றும் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்து வாகனங்களில் அடிபட்டோ அல்லது நாய்கள் கடித்தோ பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நாய்கள் கடித்து காயம்

இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்திலுள்ள கண்மாய்க்கு தண்ணீர் குடிக்க 2 வயது பெண் புள்ளிமான் ஒன்று வந்தது. இதை பார்த்த ரெட்டியபட்டியிலுள்ள 4 நாய்கள் சுற்றி வளைத்து கடித்தன. தப்பிஓடிய மானை நாய்கள் துரத்தி சென்றும் கடித்தன. இதை கவனித்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு, படுகாயமடைந்த புள்ளிமானை மீட்டு, ஆட்டோவில் ஏற்றி சென்று விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சிகிச்சை

இதுகுறித்து விளாத்திகுளம் வனத்துறையினர், கால்நடை மருத்துவரை வரவழைத்து புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அந்த புள்ளிமான் பாதுகாப்பாக, கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு