மாவட்ட செய்திகள்

வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்

வில்லியனூர் அருகே தொழிலாளி வீடு புகுந்து தாக்கப்பட்டார். அது தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 32), பிளம்பர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வில்லியனூரில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உறுவையாறு காலனி பகுதியில் சென்றபோது, அதே பகுதியைச்சேர்ந்த ஒருவர் ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை நரேஷ்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் உறுவையாறு காலனியை சேர்ந்த குருபாலன் (32), தட்சிணாமூர்த்தி (25), அருள்ராஜ் (20) ஆகியோர் நரேஷ்குமாரை தேடி திருக்காஞ்சியில் உள்ள அவருடைய வீட்டுக்குள் சென்று எங்கள் நண்பரை எப்படி கண்டிக்கலாம் என்று கேட்டு தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து நரேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு தப்பி சென்றனர்.

இதில் காயம் அடைந்த அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தாக்குதல் குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து குருபாலனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு