மாவட்ட செய்திகள்

கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்கள் கிடைக்க நடவடிக்கை தேவை - கேரள முதல்வருக்கு எம்.பி. கடிதம்

கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு தீப்பெட்டி தொழிற் கூடங்கள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீப்பெட்டி தொழில் முடங்கிய நிலையில் இத்தொழில் மூலம் வாழ்வாதாரம் பெற்று வந்த ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதனிடையே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீப்பெட்டி தொழில் நிறுவனங்கள் செயல்பட கடந்த 4-ந்தேதி முதல் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான தீக்குச்சிகள் கேரளாவில் இருந்து வருவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், தீப்பெட்டி உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் அதன் மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ள தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. எனவே கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்களை அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கேரள முதல்-அமைச்சரின் தனி செயலாளரிடமும் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு