மாவட்ட செய்திகள்

நாமக்கல் தாசில்தார் அலுவலகத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நுழைவுவாயில்

நாமக்கல் தாசில்தார் அலுவலகத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நுழைவுவாயில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் தாசில்தார் அலுவலகத்திற்கு மோகனூர் சாலை மற்றும் திருச்சி சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச்சுவருடன் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நுழைவுவாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய நுழைவுவாயிலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பச்சைமுத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜா என்கிற செல்வகுமார், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் கண்ணன், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் விஜய்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்