மாவட்ட செய்திகள்

வலங்கைமானில் ரூ.4½ கோடியில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம்

வலங்கைமானில் ரூ.4½ கோடியில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தினத்தந்தி

வலங்கைமான்,

வலங்கைமானில் கடந்த 1998-ம் ஆண்டு வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையத்தை அன்றைய கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த கோ.சி. மணி தொடங்கி வைத்தார். இந்தநிலையில் வலங்கைமானில் நவீன வசதியுடன் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வலங்கைமானில் ரூ.4 காடியில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை நேற்று தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதிய தீயணைப்பு நிலையத்தில் நடந்த விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், தி.மு.க.கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவனேசன், தாசில்தார் சந்தானகோபால கிருஷ்ணன், தீயணைப்பு மாவட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட துணை அலுவலர் முருகேசன், வலங்கைமான் நிலைய அலுவலர் சரவணன், தொழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு