மாவட்ட செய்திகள்

புவி வெப்பமாதலின் புதிய உலக வரைபடம்

உலகை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் மாற்றமாக ‘புவி வெப்பமாதல்’ பிரச்சினை உருவெடுத்துள்ளது.

தினத்தந்தி

உலக நாடுகள் பலவும், புவி வெப்பமாதலை தடுக்க உறுதிபூண்டு செயல்பட்டு வருகின்றன. புவி வெப்பமாதல் நிகழ்வால் உலக நாடுகளில் ஏற்படும் வெப்பமாற்றத்திற்கேற்ற புதிய வரைபடத்தை சின்சினாட்டி பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் டோமாஸ் ஸ்டெபின்ஸ்கி உருவாக்கி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் வானிலை மையங்களின் கடந்த 50 ஆண்டுகால தட்ப வெப்பநிலை பதிவுகளை ஒப்பிட்டு, அடுத்த 50 ஆண்டுகளுக்கான வெப்ப மாற்றத்தை கணித்து இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிளைமேட்எக்ஸ் எனப்படும் இந்த உலக வரைபடத்திற்கான இணைய பக்கமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பகுதியில் எதிர்காலத்தில் நிலவ இருக்கும் வெப்பநிலை பற்றி அறிய முடியும். புயல், சுழல்காற்று, சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு வாய்ப்பு உள்ள பகுதிகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்களை மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு அறியலாம்.

கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் ஏற்படாத மாற்றங்கள், கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமாதல் உலகளாவிய பிரச்சினை என்பதை உணர்த்தவே இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் டோமாஸ் கூறி உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு