மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய நிறுவனங்களின் அனுமதி சீட்டுக்கான கால அவகாசம் 17-ந்தேதி வரை நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அத்தியாவசிய நிறுவனங்களின் அனுமதி சீட்டுக்கான கால அவகாசம் 17-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கடைகள், தொழில் நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன.

நேற்று முதல் ஒரு சில கடைகள், ஓட்டல்கள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டு, சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களை கவனித்துக்கொள்பவர்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே ஏப்ரல் 14-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரை அனுமதி சீட்டுகளில் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த அனுமதி வருகிற 17-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை