மாவட்ட செய்திகள்

நாளை முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-தாம்பரம் இடையே 29 மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-தாம்பரம் இடையே நாளை 29 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 15 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.45 மணி முதல் மதியம் 3.10 மணி வரை 14 மின்சார ரெயில்களும் என மொத்தம் 29 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50 மணி, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மணி, கடற்கரை-அரக்கோணம் மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மணி, மதியம் 12.20, 1, 1.50 மணி, காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக கடற்கரை-தாம்பரம்-கடற்கரை இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் 8 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11, 11.45 மணி, மதியம் 12.10, 12.40, 1.05, 1.20, 2.05, 2.40 மணிக்கும், கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.10, 11.30, 11.45, 12.15, 12.55, 1.35, 2, 2.35 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1.40 மணி வரை 18 பறக்கும் ரெயில்களும், வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 8.10 மணி முதல் மதியம் 1.50 மணி வரை 18 பறக்கும் ரெயில்களும் என 36 பறக்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்