நெல்லை,
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு இருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை நகர காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவுக்கு, தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் விஜயபெருமாள், கொள்கை பரப்பு செயலாளர் மருதூர் மணிமாறன், வர்த்தக அணி செயலாளர் ஐசக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.