மாவட்ட செய்திகள்

கோவையில் இருந்து வெளிநாட்டுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற கேரள வாலிபர் கைது

கோவையில் இருந்து வெளிநாட்டுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா வுக்கு ஏர் அரேபியா விமானம் தினசரி இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை 4.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் விமான நிலையத்துக்கு வந்தனர்

அவர்களிடம் இருந்த பொருட்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த துரக்கல் ரஷாக் (வயது 23) என்ற வாலிபரின் கைப்பையில் இருந்த பொருள் மீது பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்கள், துரக்கல் ரஷாக்கின் கைப்பையை திறந்து பார்த்தபோது பிளாஸ்டிக் பைகளுக்குள் 6 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து சார்ஜாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துரக்கல் ரஷாக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்? வெளிநாட்டுக்கு யாருக்கு கொடுப்பதற்காக கடத்தி வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு