மாவட்ட செய்திகள்

குறுகலான சேலாஸ்-கொலக்கம்பை சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம்

குறுகலான சேலாஸ்-கொலக்கம்பை சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

குன்னூர்,

குன்னூரில் இருந்து சேலாஸ் வழியாக கொலக்கம்பைக்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக குன்னூரில் இருந்து கொலக்கம்பை, உட்லண்ட்ஸ், பழனியப்பா எஸ்டேட், மூப்பர் காடு ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சேலாஸ், கொலக்கம்பை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளதால், பச்சை தேயிலை பாரம் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.

ஆனால் சேலாஸ்-கொலக்கம்பை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் எதிரே வரும் பிற வாகனங்களுக்கு வாகன ஓட்டிகள் வழிவிடுவதே கடும் சிரமமாக உள்ளது. எனவே சோலாஸ் முதல் கொலக்கம்பை வரை சாலையில் குறைந்த வேகத்தில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதை மீறி சில கனரக வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில் கொலக்கம்பையில் இருந்து பழனியப்பா எஸ்டேட் செல்லும் சாலை பழுதடைந்ததால், அதனை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் சேலாஸ்-கொலக்கம்பை சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதுபோன்று மற்றொரு விபத்தும் நிகழ்ந்தது. தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால், சேலாஸ் முதல் கொலக்கம்பை வரை சாலையில் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு