மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே, தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

அரசூர்,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தவரின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

இதையடுத்து போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த நபர் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது