அயோத்தியாப்பட்டணம்,
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, பெண்களை பலாத்காரம் செய்த வழக்கு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் உள்பட போலீசார் 20 நாட்களுக்கு முன்பு பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.