ஒரு மாணவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட காட்சி. 
மாவட்ட செய்திகள்

9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன

பெரம்பலூர் மாவட்டத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.

பெரம்பலூர்:

பள்ளிகள் திறப்பு

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து மூடப்பட்டன. அதன் பின்னர் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகு, அந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் படி 9, 11-ம் வகுப்புகளுக்கு கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 147 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

நேற்று காலை 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகமாக, முக கவசம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். விடுதியில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு காலையில் சீக்கிரமாகவே வந்தனர். பின்னர் அவர்களும் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நுழைவு வாயிலிலேயே மாணவ-மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் பெற்றோரிடம் பெற்று வந்த இசைவு கடிதத்தை ஆசிரியர்கள் வாங்கிக்கொண்டனர்.

20 மாணவ- மாணவிகள் வீதம்...

பின்னர் ஒரு வகுப்பறையில் 20 மாணவ- மாணவிகள் வீதம் இருக்கைகளில் அமர செய்து, ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடங்களை கற்பித்தனர். ஒரு பள்ளியில் இருந்து 9, 11-ம் வகுப்பு பயில புதிதாக மற்றொரு பள்ளிக்கு வந்த புதிய மாணவ-மாணவிகளில் பலர் சீருடையில் வரவில்லை. மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், வகுப்பறைகள் எண்ணிக்கையை பொறுத்து வகுப்புகள், பாடப்பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள் செயல்படுகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு