மாவட்ட செய்திகள்

கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்ட எதிர்ப்பு: மனித பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மனித பாதுகாப்பு கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கேரளாவில் இருந்து கோழி, ஆடு, மாடு மற்றும் மருத்துவ கழிவுகளை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து தமிழகத்தில் அதுவும் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டப்படுவதாகவும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தண்ணீர் மாசு

ஆர்ப்பாட்டத்துக்கு துணை தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ஜெய்மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, கேரளாவில் இருந்து தினந்தோறும் ஆடு, மாடு, கோழி மற்றும் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து குமரி மாவட்ட நீர் நிலைகளில் கொட்டுகிறார்கள். இதனால் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு அறியப்படாத நோய்கள் வருகின்றன. கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கக்கோரி போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்துக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது இச்செயலை தடுக்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் உஷா, செயலாளர் ஜாண் வின்சென்ட்ராஜ், இணை செயலாளர் ராமசாமிபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்