மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு:- காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு:- காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தின் முன்பு கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

நிர்வாகிகள் வரதன், பக்கிரிசாமி, அம்மன்குமார், சரவணன், சுந்தர்ராஜன், வாசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கையெழுத்து இயக்க ஆர்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கையொப்பம் இட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு