கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.வினர் ஈடுபடுவார்கள் என்று அறிவித்து இருந்தார்.இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், நேற்று நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுக்கடைகள் திறப்பை கண்டித்து கங்கை கொண்டான் மண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் எம்.பி.தயாளன், சீனிவாசன், அரசியல் ஆறுமுகம், என்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை ராதா கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசினார். இதில் பா.ம.க. மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், உலகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கச்சூர்
பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், செங்கல்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் திருக்கச்சூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர்கள் அரி, சரவணன், நிர்வாகிகள் அருண்குமார், பாலு, பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் நகர செயலாளர் சபரி, மாவட்ட துணைச்செயலாளர்கள் முதுகரை சங்கர் ஆகியோர் முன்னிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பாட்டாளி கட்சி சார்பில் காஞ்சீபுரம் பஸ்நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வ.உமாபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் வரதராஜன், சரளாராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலையில் பா.ம.க. நிர்வாகிகள் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ். எம். நிர்மல்குமார், முன்னிலை வகித்தனர்.ரவி, மோகன்ராம், சரவணன், சுரேஷ், முனுசாமி வீரா, சகாதேவன், தனசேகர் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம், மற்றும் காட்டுக்கருணை உள்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பா.ம.க.வினர் தங்கள் வீடுகளின் எதிரே கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.இதில் பா.ம.க மாவட்ட செயலாளர் வா.கோபாலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சி.எம்.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.