மாவட்ட செய்திகள்

சென்னையில் 42,532 காய்ச்சல் முகாம்கள்-22,873 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 209 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 பேருக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது.

இதையடுத்து அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் 22 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்