மாவட்ட செய்திகள்

பாறை மீது அரசு பஸ் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

தாண்டிக்குடி அருகே பாறை மீது அரசு பஸ் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

பெரும்பாறை,

பண்ணைக்காடு ஊத்து பகுதியில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பண்ணைக்காடு-தாண்டிக்குடி மலைப்பாதையில் தாண்டிக்குடி அருகே ஆண்டிஅலை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த ஜீப்புக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாறை மீது பஸ் மோதியது.

இதில் பஸ்சின் முன் பகுதி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தாண்டிக்குடி போலீசார் விரைந்து சென்று பஸ்சை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது. ஆண்டிஅலை பகுதியில் மலைப்பாதையில் பாறை விழுந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனாலேயே பஸ் விபத்தில் சிக்கியுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு