மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீ விபத்து

குன்னம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே எறைய சமுத்திரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 25 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது. பள்ளி முடிந்த பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து பள்ளி வளாகத்தை வழக்கம் போல் சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் தேவி என்பவர் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து விட்டு பள்ளியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பள்ளியை துப்புரவு செய்ய தேவி வந்தார். அப்போது தலைமையாசிரியை அறைக்கு பக்கத்தில் உள்ள அறையை சுத்தம் செய்ய கதவை திறக்கும் போது அங்கிருந்து புகை வந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பள்ளி ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்து தீ படித்து புகை வந்தது. மேலும் பீரோவின் ஒரு கதவு திறந்த நிலையில் புகை வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவி பள்ளி அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பீரோவில் இருந்த ஆவணங்கள் முழுவதும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி பள்ளிக்கு விரைந்து வந்தார். பின்னர் இதுகுறித்து அவர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலா, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ராமதாஸ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளியில் தீ விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பீரோவின் அருகில் இருந்த ஜன்னல் மூலம் மர்ம நபர்கள் ஆவணங்களை தீ வைத்தனரா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு