ஹாவேரி (மாவட்டம்) தாலுகா நாகனூரு கிராமத்தைச் சேர்ந்தவர் வித்யாஸ்ரீ(வயது 22). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இர்ஷாத் குடச்சி(24) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வித்யாஸ்ரீக்கு வேறு ஒருநபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வித்யாஸ்ரீ நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர், தனது காதலன் இர்ஷாத்தை சந்தித்து பேசினார். அதையடுத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நாகனூரு கிராமத்தையொட்டி உள்ள இர்ஷாத்துக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு வைத்து இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ஹாவேரி புறநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.