மாவட்ட செய்திகள்

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பொன்விழா ஆண்டு மாரத்தான் ஓட்டம்

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடந்த மாரத்தான் ஓட்டத்தில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

தினத்தந்தி

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் விளையாட்டுக் கழகம் சார்பில் கல்லூரி பொன்விழா ஆண்டு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு 12 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 6 கி.மீ தூரமும் இலக்காக கொடுக்கப்பட்டது. ஓட்டத்தை வள்ளிமயில் ஜீவல்லர்ஸ் உரிமையாளர் வேம்பு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குநர் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அழகப்பன் தலைமை தாங்கினார். மதுரா கோட்ஸ் ஆலைகளின் குழும தொழில் உறவு மேலாளர் முருகேசன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

மாணவர்கள் பிரிவில் பாளையங்கோட்டை மனோ முதலிடம் பிடித்து ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசையும், வீரவநல்லூர் புனித ஜான்ஸ் உடற்கல்வியியல் துறை மாணவன் பசுபதி இரண்டாம் இடம் பிடித்து ரூ.2ஆயிரத்து 500 ரொக்கப்பரிசையும், சிவகாசி ஐய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி உடற்கல்வியியல் துறை மாணவன் கஜேந்திர கோகுல் மூன்றாம் இடம் பிடித்து ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசையும் பெற்றனர். இந்த ஓட்டத்தில் மாணவர் பிரிவில் 300 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவிகள் பிரிவில் வீரவநல்லூர் புனித ஜான்ஸ் உடற்கல்வியியல் துறை மாணவிகள் முத்துமாரி முதலிடம் பிடித்து ரூ.3ஆயிரம் ரொக்கப்பரிசையும், மாணவி ரம்யா இரண்டாம் இடம் பிடித்து ரூ.2ஆயிரத்து 500 ரொக்கப்பரிசையும், மூன்றாம் இடத்தை மாணவி முத்துசெல்வி ரூ.2ஆயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த ஓட்டத்தில் 100 மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் 6 முதல் 20 வரை இடங்கள் பிடித்த அனைத்து வீரர்களுக்கும், ரொக்கப்பரிசு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உடற்கல்வித்துறை இயக்குநர் பழனிக்குமார் நன்றி கூறினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் நடராஜன், ஆங்கிலத்துறை தலைவர் ரவிசங்கர், தாமிரபரணி ஸ்போர்ட்ஸ் உறுப்பினர்கள் ஆகியோர் ஒருங்கிணைப்பு பணியை செய்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது