மாவட்ட செய்திகள்

முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளை சிறப்பு கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளை சிறப்பு கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

முகாமில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் விவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர் குடும்ப உறுப்பினர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும். அதுபோல் முன்னாள் படைவீரர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் கொடிநாள் வசூலை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.இந்த முகாமில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் லின்.கமாண்டர் கணேசன் வேலுச்சாமி, மாவட்ட முப்படை வீரர் வாரியத்தின் துணை தலைவர் கர்னல்(ஓய்வு) ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை