மாவட்ட செய்திகள்

இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரயாக வந்த பக்தர்கள்

தை மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தனர்.

தினத்தந்தி

சாத்தூர்,

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இருப்பினும் ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த மாதங்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்வர். மேலும் ஆடி மற்றும் தை மாதங்களில் தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக அதிக அளவிலான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

பாதயாத்திரை

இந்தநிலையில் நேற்று தை மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

இதில் பெண்கள் அதிக அளவில் வந்தனர். ஆதலால் வழக்கத்தை காட்டிலும் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு