மாவட்ட செய்திகள்

பென்னாகரம் ஒன்றியக்குழு கூட்டம்; தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பென்னாகரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினத்தந்தி

பென்னாகரம்,

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அற்புதம் அன்பு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாசன ஏரிகளில் நிரப்ப வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைபணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசுகையில், கொரோனா பரவல் தடுப்புக்கான செலவினங்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையான கணக்குகள் இல்லை. கொரோனா செலவினத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளது. கொரோனா செலவினங்கள் தொடர்பாக முறையான கணக்கை காண்பிக்க வேண்டும்.

ஒகேனக்கல் பரிசல்துறைக்கான டெண்டர் ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நடத்தப்பட்டுள்ளது. அதிலும் ஊழல் நடைபெற்று உள்ளது என்று புகார் தெரிவித்தனர். பின்னர் கூட்ட அரங்கை விட்டு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு