மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் - இன்று நடக்கிறது

நாகை மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று(சனிக் கிழமை) நடைபெறுகிறது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் இன்று(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி நாகை வட்டம், திருப்புகலூர் கிராமத்தில் தனித்துணை கலெக்டர் வேலுமணி தலைமையிலும், திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை கிராமத்தில் நாகை கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளர் பாத்திமா சுல்தானா தலைமையிலும், வேதாரண்யம் வட்டம் கோவில்பத்து கிராமத்தில் நாகை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கனகசபை தலைமையிலும், மயிலாடுதுறை வட்டம் சேத்தூர் கிராமத்தில் மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் தேன்மொழி தலைமையிலும் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

தரங்கம்பாடி வட்டம் பெரியமடப்புரம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) வெங்கடேசன் தலைமையிலும், சீர்காழி வட்டம் வாணகிரி கிராமத்தில் மயிலாடுதுறை தனித்துணை கலெக்டர் தெய்வநாயகி தலைமையிலும், குத்தாலம் வட்டம் பண்டாரவாடை கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜீ தலைமையிலும், கீழ்வேளூர் காக்கழனி கிராமத்தில் வட்ட வழங்கல் அலுவலர் தர்மராஜ் தலைமையிலும் முகாம் நடைபெறகிறது. இந்த முகாம் அந்தந்த ஊர்களில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்களில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது ரேஷன் கடை சம்பந்தமான புகார்கள் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான பெயர் நீக்கல், சேர்த்தல், கடை மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப அட்டை மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் போன்ற கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு