மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் ஈழுவா-தியா சமுதாய மக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தினத்தந்தி

ஈரோடு,

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கோரி அரசாணை வெளியிடப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவிற்கு கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் வருகிற 26-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அல்லது குழுவின் உறுப்பினர் -செயலாளர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குனர், எழிலகம் விரிவாக்க கட்டிடம், 2-ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக அல்லது dbcwoerd@gmail.com, dircombc@tn.gov.in, dirbcmw@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு