மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 199 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68 ஆயிரத்து 950 மதிப்பீட்டிலான திறன்பேசி (ஸ்மார்ட்போன்) மற்றும் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், உதவி ஆணையர் (கலால்) லட்சுமணன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) ஜெயதீபன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு