மாவட்ட செய்திகள்

பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஈரோடு,

பெரியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியாரின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநில நிர்வாகிகள் அந்தியூர் செல்வராஜ், எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாவட்ட தலைவர் நடராஜ், மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் ஏ.ஜி.எஸ்.கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியாரின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை அமைப்பாளர் ஜாபர்அலி, தொகுதி துணைச்செயலாளர் ஒயிட்சாதிக், தொண்டர் அணி அமைப்பாளர் பஷீர், நிர்வாகிகள் அப்துல், காஜா, சாஜித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் புலிகள் கட்சி சார்பில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ரமணன், துணைச்செயலாளர் பூங்காசபி, கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன், மாணவர் அணி செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைச்செயலாளர் தேசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சென்னியப்பன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் கபிலன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். குறிஞ்சியர் சமூக நிதி பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட தலைவர் ராஜ், மகளிர் அணி தலைவர் நவமணி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இதேபோல் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்