மாவட்ட செய்திகள்

தெருவோர சுமை சிறு வியாபாரிகள் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

தெருவோர சுமை சிறு வியாபாரிகள் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட தெருவோர சுமை சிறு வியாபாரிகள் முன்னேற்ற பேரவை சார்பில் தலைவர் ராமு முருகேசன் தலைமையில்கலெக்டர் சிவன்அருளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில், கொரோனா பாதிப்பால் தெரு வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிறு வியாபாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு மனு அளிக்க கூறினார். அதன்படி அவர்கள் பேரவை உறுப்பினர்கள் பெயர்களை எழுதி கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது