திருவாரூர்,
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் குறைவான ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 70 சதவீதம் பேர் பெண் ஊழியர்கள். இவர்களுக்கு வார விடுமுறை, காலமுறை ஊதியம், ஓய்வு அறை கிடையாது.
மேலும் மாவட்ட கலெக்டர் அறிவித்த சட்டக்கூலி, ஊதிய உயர்வு எதுவும் கிடையாது. பணியின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தால் எந்தவித நிவாரணமும் கிடையாது.
பணி நிரந்தரம்
நிரந்தர பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் இவர்கள்தான் செய்யவேண்டும். எல்லா வேலைகளையும் செய்யும் இவர்களுக்கு சம்பளம் மாதந்தோறும் 7-ந் ததிக்கு பின்னர் தான் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று வந்தது முதல் ஒப்பந்த ஊழியர்கள் எந்த வித பாதுகாப்பும், ஓய்வும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். எனவே அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, சிறப்பூதியம் உட்பட மற்ற சலுகைகளையும் அறிவித்து அவர்களை பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.