மாவட்ட செய்திகள்

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி மயூரநாதர் கோவிலில் இருந்து மயூரநாதர்-அபயாம்பிகை சாமிகள், ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகி சாமிகள், காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர்-காசி விசாலாட்சி சாமிகள் ஆகிய சாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் வீதிஉலாவாக சென்று காவிரி துலா கட்டத்தின் தென்கரையை அடைந்தது. இதேபோல் வள்ளலார் கோவிலில் இருந்து வதாண்யேஸ்வரர்- ஞானாம்பிகை, மேதா தட்சிணாமூர்த்தி, கங்கையம்மன் ஆகிய சாமிகள் வீதிஉலாவாக வந்து துலாக்கட்ட வடகரையை அடைந்தது.

இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் அனைத்து சாமிகளின் முன்னிலையிலும் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

பக்தர்கள் புனித நீராடினர்

அப்போது தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் புனிதநீராடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். பின்னர் அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை சிவபுரம் வேதசிவகாம பாடசாலை முதல்வர் சாமிநாதன் சிவாச்சாரியார், மணிகண்ட குருக்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்