கோவை,
கோவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் கோவை 2-ம் இடத்தில் உள்ளது.
கோவையில் இதுவரை 56,800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று தினசரி 100-க்கு கீழ் குறைந்த நிலையில் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் முதல் தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டி உள்ளது.
இதனால் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் கூடுதல் சுகாதார துறையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இ-பாஸ் இன்றி வருபவர்கள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். தொற்று அதிக ரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 665 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 100 அவசர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகளாகும். இங்கு தற்போது 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதியுள்ள படுக்கைகள் காலியாக உள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் 555 படுக்கைகள் உள்ளன. இங்கு 25 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதி படுக்கைகள் காலியாக உள்ளன.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகள், மதுக்கரை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. மத்தாம்பாளையம் கருண்யா கொரோனா சிகிச்சை மையத்தில் 607 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று கண்காணிக்கப் பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக் கும் என்பதால் மாநகராட்சியின் உதவியுடன் கூடுதலாக ஒரு கொரோ னா சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.