மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரம்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மறுசுழற்சி செய்யும் எந்திரம்

திருவள்ளூரில் உள்ள பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் இல்லா திருவள்ளூர் மாநகரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின்படி தனியார் நிறுவனத்தின் சார்பாக ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரம் தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தை துவக்கி வைத்து மறுசுழற்சி செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெரிய அளவில் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஒரே நாளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், நகர் மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர் மீரான் ஒலி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜூலு, தனியார் நிறுவன முனைவர் தனலட்சுமி, கண்காணிப்பு அலுவலர் மாதவன், மேலாளர் மதுசூதனன் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்