மாவட்ட செய்திகள்

புதுச்சேரி மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரியை மாற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் - காரைக்காலில் நடந்தது

காரைக்காலில் புதுச்சேரி மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரியை மாற்றக்கோரி பா.ம.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் காரைக்கால் பழைய ரெயில்வே நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி தலைமை தாங்கினார். இதில் மாநில பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜெயபால், காரைக்கால் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க துணைத்தலைவர் கணபதி, மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, கபீர், மஸ்தான், கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த 25 ஆண்டுகாலமாக வெளி மாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாகவும், தொழிலாளர்களுக்கான பல சலுகைகளை வழங்காமலும், தொழிலாளர் விரோத போக்குடன் தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகவும் இயங்கி வரும் காரைக்கால் மேலகாசாகுடியில் இயங்கும் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.காரைக்காலில் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படும் மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரியை உடனே பணியிடம் மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது