மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் போலீசார் அதிரடி: செம்மண் கடத்திய 2 மினி லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது செம்மண் கடத்தியதாக 2 மினி லாரிகள், பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மார்த்தாண்டம் ஞாறான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள கைசாவிளை என்ற இடத்தில் மணல் கடத்தும் கும்பல், வாகனங்களில் செம்மண் ஏற்றி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே போலீசார் மணல் கடத்தும் கும்பலை நெருங்கியது. போலீசாரை பார்த்ததும் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது செம்மன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகள், பொக்லைன் எந்திரத்தை கும்பல் விட்டு சென்றது.

இதனையடுத்து போலீசார் 2 மினி லாரிகள், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். நள்ளிரவில் போலீசாரின் அதிரடியால் மணல் கடத்தல் காரர்களுக்கு சொந்தமான மினிலாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு