மாவட்ட செய்திகள்

காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை

காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தற்போது கள், மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி நடைபெறும் மது விற்பனையை தடுக்க போலீஸ் துறை மற்றும் கலால் துறை சார்பில் காரைக்காலில் தீவிர ரோந்து பணி நடைபெற்றது.

இந்நிலையில், திருநள்ளாறு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் வயல்வெளியில்

போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வயலில் கேன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 4,600 லிட்டர் சாராயம் கேட்பாரற்று கிடந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இந்த சாராயத்தை வயலில் போட்டு சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்