அடையாறு,
சென்னை அடையாறு சிக்னல் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மத்திய கைலாஷ் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் காரை ஓட்டிவந்த நபர், காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். காருக்குள் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வந்த காரை சோதனையிட்டனர். அதில் 4 வீச்சரிவாள்கள் மற்றும் 1 பட்டாக்கத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.