மாவட்ட செய்திகள்

தடுப்புக்காவல் சட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பலராமன் என்பவரது மகன் பரத் என்ற பாரதி(வயது 31). இவர் மீது திண்டிவனம் பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் பரத்தை திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் பரத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து பரத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்