மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,23,779 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,23,779 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்குவதை கலெக்டர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

திருப்பத்துர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,23,779 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்குவதை கலெக்டர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு

திருப்பத்துர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்துர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷவாஹா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் வரவேற்று பேசினார்.

அனைவரும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தனர். பின்னர் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

2,23,779 குடும்ப அட்டைகளுக்கு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. திருப்பத்துர் தாலுகாவில் 216 ரேஷன் கடைகள் மூலமாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 320 ரேஷன் அட்டைகளுக்கும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 89 ரேஷன் கடைகள் மூலமாக 49 ஆயிரத்து 209 ரேஷன் அட்டைகளுக்கும், வாணியம்பாடி தாலுகாவில் 100 ரேஷன் கடைகள் மூலமாக 73 ஆயிரத்து 770 ரேஷன் அட்டைகளுக்கும், ஆம்பூர் தாலுகாவில் 112 ரேஷன் கடைகள் மூலமாக 72 ஆயிரத்து 480 ரேஷன் அட்டைகள் என மொத்தம் 517 ரேஷன் கடைகள் மூலம் இலங்கை தமிழர்கள் உள்பட 3 லட்சத்து 23 ஆயிரத்து 779 ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஒரு ரேஷன் கடையில் தினமும் 200 பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப்படுகிறது. அதனால் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பிரியதர்ஷனி, மாவட்ட கவுன்சிலர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு