மாவட்ட செய்திகள்

பொன்னேரியில் விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள்

பொன்னேரியில் வேளாண்மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது.

பொன்னேரி,

பொன்னேரியில் வேளாண் மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் 29 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் 40 வயது வரை செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகை அடிப்படையில் அரசு பங்களிப்பு வழங்கும். 60 வயது அடைந்த பின்னர் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இறப்புக்குப் பின் குடும்பத்திற்கு பாதி ஓய்வுதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது தங்களின் ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.

இந்த முகாமில் வேளாண் மை அலுவலர் டில்லிகுமார், துணை வேளாண்மை அலுவலர் நாயகம், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஐஸ்வர்யா, சிவலிங்கம், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்