மாவட்ட செய்திகள்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆசிரியர்கள் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். அரசு மற்றும் நிதி உதவி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும். ஆசிரியைகளின் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு 2 வருடங்களாக வழங்கிட வேண்டும். ஆசிரியைகளுக்கு ஆண்டு தோறும் இலவச மருத்துவ பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனுவாசன், பொருளாளர் அந்தோனிராஜ், கீழ்பென்னாத்தூர் வட்டார செயலாளர் முருகன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு