இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா, முன்னாள் ஓய்வு பிரிவு செயலாளர் ஸ்ஸ்ரீபன் சற்குணம், திருத்தணி கல்வி மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் விஜயகுமார், சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.