பின்னர் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் நிர்வாகிகளும், பா.ஜனதாவினரும் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.வரவேற்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ், மாநில செயலாளர் உமாரதி, ஊடகப்பிரிவு செயலாளர் ராஜன், நாகராஜன், அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.அதன்பிறகு அவர் கோவிலுக்குள் சென்று நாகராஜரை வழிபட்டார். மேலும் அனந்தகிருஷ்ணர், சிவன், பாலமுருகன் உள்ளிட்ட சாமிகளையும் பிரகலாத் மோடி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் பெருவிளையில் உள்ள சுடலை மாடசாமி கோவில், இசக்கியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார். அங்கு ஸ்ரீபாத மண்டபத்தை பார்வையிட்டு அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்தார். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரிய யோஜனா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, பிரியதர்சினி, நிர்வாகிகள் நிலேஷ் ராம், விஜி, சதீஷ், கிருஷ்ணா, மணி, தணிகை குமார், முத்து, சரவணன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுபோல், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலிலும் சாமி கும்பிட்டார்.